Friday, July 13, 2007

இது நல்லா இருக்கு.. ஆனா தமிழ் எழுத்துக்கள் டப்பா - டப்பாவா இருக்கு

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்

நான் என் பிளாகிலே புதுசா ஒரு விட்ஜெட் சேர்த்திருக்கேன்.. அப்படியே Left side bar லே ஒரு நோட்டம் விடுங்க..தெரியுதா ? ?.. அதாவது என்னுடைய Phothoblog லே என்னென்ன பதிவுகள் இருக்கோ அதை ஒரு கண்ணோட்டம் மாதிரி இங்கே இனிமே பார்க்கலாம்.

இதை ஏன் செஞ்சேன்? ?

எல்லாரும் எப்போதும் என்னுடைய எல்லா பதிவுகளையும் படிக்க மாட்டாங்க. ஸோ.. நான் என் photoblog லே புதுசா ஏதாவது பதிவு போட்டா .. அதை ஆடோமேடிக்கா தெரிஞ்சுக்க வாய்ப்பில்லை. ஸோ.. இந்த மாதிரி ஒரு preview குடுத்தா எளிதா தெரிஞ்சுக்கலாமே.. அதான்

இதை எப்படி செய்தேன் ?

இது widgetbox.com ன் Blidget என சொல்லப்படும். அதாவது உங்கள் பிளாகையே மொத்தமா ஒரு widget ஆக்கிடலாம்.. என்னை பொறுத்தவரையில் இது photoblogs க்கு மிகச்சிறந்தது.. தேவையும் கூட...

செய்வது ரொம்ப சுலபம்
PHase 1 :- blidget ஐ உருவாக்குவது


  1. widgetbox.com ல் ஒரு பயணர் கணக்கு உருவாக்க வேண்டும்

  2. Make Blidget ன்னு இருப்பதை தேர்வு செய்து.. உங்கள் phothoblog ன் முகவரியை கொடுக்கவும்

  3. அடுத்தது LAYOUT .. இது உங்கள் விருப்பம் பொறுத்தது.. Sidebar லே வைக்கணும்ன்னா Narrow வும்:::: header க்கு கீழே / எல்லா பதிவுகளுக்கும் மேலே ன்னா Wide ஐ தேர்வுசெய்யலாம்

  4. DISPLAY ல் header style ஐ title only ன்னு கொடுப்பது தான் photoplog க்கு சிறந்தது...(படத்தை தானே முக்கியமா காட்டணும்...படத்தை குறித்து எழுதியிருப்பதை பதிவிலே படிக்கலாமே)

  5. அப்புறம் உள்ளதெல்லாம் சிம்பிள்.. நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த blidget ஐ பொதுஜன பார்வைக்கு வைக்கவும் மற்றும் உங்கள் பிளாக் குறித்து ஒரு சில வரிகளில் சொல்லணும்..
ஈஸி தானே...blidget ஐ publish பண்ணவேண்டியது தான்


PHASE 2 :- blidget ஐ உங்கள் பிளாகில் சேர்ப்பது

இதுக்கு அவங்களே எல்லா option ம் கொடுத்திருக்காங்க.. கீழே இருக்கும் படத்துகு மேலே mouse - move பண்ணினால்..எந்தெந்த platform ல் சேர்க்கலாம் ன்னு தெரிஞ்சுக்கலாம் ( blogger - typepad - goodle - netvibes..etc etc)

TypePad   Blogger   MySpace   Facebook   Netvibes   Pageflakes   Google   Blogger PostFreewebs   Piczo   Widget Code
நேரடியா அங்கேயிருந்தே உங்க பிளாகிலேயும் சேர்க்கலாம்.. இல்லை get code ங்கிரதை க்ளிக்கி ஜாவஸ்க்ரிப்ட் கோடை தேர்ந்தெடுத்து... உங்கள் பிளாகின் template-page elemnts - add new elelents - html hjavascript element ன்னு செய்தும் சேர்க்கலாம்

அம்புட்டுத்தேன்... ஒண்ணும் பிரம்மவித்தை இல்லை

இதை ஏன் தமிழ்வலைப்பதிவர் உதவி பக்கத்திலே சொல்லலை... ? ?

தலைப்பிலே சொல்லியுருக்கேனே... டப்பா டப்பாவா தமிழ் எழுத்துக்கள் தெரியுதுன்னு... அது தான் காரணம்..

நான் widgetbox ன் உதவித்தளத்தில் இதை குறித்து சொலியிருக்கிறேன்... அதாவது..தார்ப்போது unicode எழுத்துக்கள் தெரிவதில்லைன்னு... அவங்க கிட்டேயிருந்து எந்த பதிலும் இல்லை.. தனி மடலும் போட்டாகிவிட்டது.. எந்த சலனமும் இல்லை..

இதை படிப்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம்... இந்த blidget சமாசாரம் தமிழில் photoblog வைத்திருப்பவர்களுக்கு உபயோகமா இருக்கும்ன்னு நீங்க நினைச்சா.. widgetbox-குழுவிலே ஒரு பயணர் கணக்கு துவங்கி..... "widgetbox உபயோகிப்பவர் குழு".... அல்லது... widgetbox ல் நீங்கள் விரும்பும் புதியவைக்காக இயங்கும் குழு"... இந்த ரெண்டு குழுவிலே ஏதாவது ஒண்ணிலே ( ரெண்டுமேன்னாலும் நோ பிராப்ளம்)... உங்கள் கருத்தை சொல்லுங்க.. ஒருவேளே... நிறையபேர் சொன்னா... இந்த blidget ல் தமிழ்(unicode) எழுத்துக்களும் தெரிய சீக்கிரம் ஒரு தீர்வு வரலாமில்லையா..

0 comments: