பங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு
நட்சத்திரம் குடுக்கலாம்
இது எனக்கு முதல் பதிவர் சந்திபு அனுபவம். யாரெல்லாம் வருவாங்க.. என்னெல்லாம் பேசுவாங்க.."தமிழ் வலப்பதிவர் சந்திப்பு".. ன்னா தமிழ்-இலக்கணம்-இலக்கியம்னெல்லாம் பேசுவாங்களோ..?.. எழுத்தாளர்களின் கதை-கவிதை-கட்டுரைன்னு போட்டு தாக்கினா... எனக்கு நாம்கேவாஸ்தே.. (नाम-के-वास्ते கூட )எந்த எழுத்தாளரின் பெயரோ..படைப்போ தெரியாதே. :-s எனக்கு உருப்படியா தங்களீஷ் சேர்க்காமல் - spelling mistake இல்லாம .. முழுசா ஒரு பாரா (அதாங்க paragraph) கூட எழுத வராதே..எல்லாரும் hi-funda மேட்டர் பேசினா.. நன் மட்டும் பேக்காட்டம் இருப்பேனே... உங்களுக்கு என்ன.. " நான் பதிவெல்லாம் எழுதரதில்லை..தீபா தான் எழுதுவா.."..ன்னு சொல்லி தப்பிச்சுக்குவீங்க.....இப்படியெல்லாம் வெள்ளிக்கிழமை ராத்திரி.. எனக்கு anxiety- attack வந்து கோவிந்தை துளைச்செடுத்து ஒரு வழி பண்ணிட்டேன்.. அவரும் ரொம்ப பொறுமையா எனக்கு " கவலைப்படாதே.. அங்க போய் தான் பார்ப்போமே... நமக்கு தெரிஞ்ச விஷயமா இருந்தா கலந்துக்குவோம்.. இல்லையா தெரிஞ்சுக்குவோம்...இதுக்காக நீ இவ்வளவெல்லாம் அலட்டிக்காதே.."ன்னு சொல்லியும் எனக்கு என்னமோ ஒரு உதறல்.. எங்கே.. odd-man-out மாதிரியாயிடுமோன்னு...கடைசீயா.. அவர் பொறுமையிழந்து.." யம்மாடி.. மணி 12.00 வுது.. இனிமேலும் நீ இப்படியே சொன்னீனா.. நாளைக்கு லால்-பாக் பிரோக்ராமை கேன்சல் பண்ணிடலாம்..ராத்திரியெல்லாம் யோசி.. காலையிலே எனக்கு சொல்லு... இப்போ எனக்கு தூக்கம் வருது.."...ன்னு ஒரு டோஸ் விட்டார்..
அப்புறம் காலையிலே தான் இதை பத்தி பேச்சு..."10 மணிக்கு கெளம்பினா..கரேக்டா 10.30க்கு போயிடலாம்.. ஓகேவா?..".. நானும் கப்-சிப்ன்னு கெளம்பிட்டேன்.. ஏதாவது சொல்லப்போய்.. லால்பாகும் வேண்டாம் - லீல்பாகும் வேண்டாம் ன்னு சொல்லிட்டா... ஷ்..ஷ்..ஷ்..
என்னிக்கும் வராத்த ஒரு குடும்ப நண்பர் பேமலியோட weekend visit க்கு காலையிலெயே வந்துட்டார்... சோ.. கிளம்பிர அவசரத்திலே.. ( சரியா 10.30 க்கு லால்பாக்லே இருக்கணமில்லே... முதல் மீட்டிங்க்கே லேட்டா போனா.. நம்ம ரெபுடேஷன் என்ன ஆவரது..).. டிபன் எதுவும் சாப்பிடலை... ஆனாலும் கோவிந்துக்கு தாங்கலை... "ஏம்மா.. உன்க்கு தான் பசி தாங்காதில்லே.. அடிகாஸ்லே...ஒரு இட்லியாவது பார்சல் பண்ணிக்கலாம்.. நீ காரிலேயே சாப்பிடு"... (எவ்வளவு கரிசனம் பாருங்க.. இவரை போய் நான் ராத்திரி பூரா அப்படி தொந்தரவு பண்ணிட்டேனே..:((.)... அங்கே போய் பார்த்தா... பங்களூர்லே சனி-ஞாயிரு எல்லாரும் கிச்சனுக்கு லீவு விட்டுவாங்கன்னு சொல்லும் அளவுக்கு கூட்டம்... அவன் அவன் 3- 4 ஐட்டம் ஆர்டர் பண்ணரான்..ஒரு பிளேட் இட்டிலிக்காக 20 நிமிஷம் க்யூலே நிக்கணுமா... இட்டிலியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்... இனிமே நோ ஸ்டாப்... ஸ்ட்ரைட்டா லால்பாக் தான் ( நான் தான் கோவிந்துக்கு ஆர்டர்)...வயித்துள்ளே எலி குடு-குடுன்னு ஓடுர ஒரு பீலிங்க...என்ன.. ஒரு நாள் தானே சகிச்சுக்கலாம்...நான் மனசுக்குள்ளே ( கோவிந்துக்கு கேட்டுதோ என்னமோ...ஹ்ம்ம்)
ஒரு 10.45 கெல்லாம் லால்பாக் Glass House லே ரெண்டுபேரும் ஆஜர்.. திருவிழாவிலே தொலஞ்சு போன கிராமத்தான் மாதிரி கழுத்தை left-right :: left-right ன்னு திருப்பி திருப்பி.. எங்கேயாவது 3-4 பேரா கும்பல் (???) இருக்கான்னு தேடி.. ஹப்பாடா.. நாம தான் பர்ஸ்ட்.. நம்மளை யாரும் இனிமே லேட்டுன்னு சொல்லமுடியாது...ன்னு ஒரு அல்ப-சந்தோஷம்.. ராம் நம்பருக்கு போன் போட்டு பேசினதிலே... அவர் On the way ன்னு சொன்னார்.. நம்ம பத்ம-பிரியா நம்பரும் குடுத்தார்... Traffic tension ஓ என்னமோ.. நடுவிலே ஒரு நம்பறை முழுங்கி.. மிச்சதை சொன்தாலே... பத்ம-பிரியா கூட பேச முடியலை.. அப்படியே.. ஒரு பார்வை விட்டா.. என்களுக்கு பக்கத்து பெஞ்ச்சிலே ஒரு லேடி தனியா இருந்தாங்க.. நான் ஒரு தோழமை உணர்வோட அவங்க கிட்டே போய்... " Hi.. Are you here for the Bloggers Meet.. Are you Padma Priya ..I am Deepa"... ன்னு அவங்க பதிலுக்கு காத்திருக்காம கேள்விக்கணைகளை தொடுத்தென்... என்னை ஏற-இறங்க ஒரு முறை பார்த்து.. "No" ன்னு ஒரு வார்த்தையோட முடிச்சுகிட்டாங்க.. ஓரு வேளே போன்லே பேசியிருந்தா "Sorry Wrong Number" ன்னு சொல்ல்யிருப்பாங்களோ என்னமோ.. யாரு கண்டா... இத்தனையும் பார்த்துகிட்டுயிருந்த கோவிந்த்... ஏதோ தும்மல்-இருமல் வரும்போது முகத்தை அந்த பக்கம் திருப்பிக்குவோமே... அப்படி திருப்பி அடக்கமுடியாத்த சிரிப்பை... அடக்கி சிரித்துகொண்டார் ;))
ஒரு 11.00- 11.15 க்கு ஒரு கும்பல் ( 3-4 பேர்) தமிழிலே பேசினதை கேட்டோம்.. அப்போ கோவிந்துக்கு போன் வந்ததாலே.. அவர் அதை பேச போய்விட்டார்... எனக்கு இங்கே பெஞ்சிலே இருப்பே கொள்ளலை... அவரோ போன் விட்டு வரமாதிரி தெரியலை.. சரி..அவர் பேசிவிட்டு வரும்போது வரட்டும்ன்னு.. அந்த கும்பல்லே ( இன்னமும் எனக்கு யாரெயும் தெரியாது... சோ..) இருந்த லேடிகிட்டே ( மறுபடியுமா....கடவுளே ..? ? ? )... தமிழிலேயே.. "நீங்க தான் பத்மப்பிரயாவா..? ?"ன்னு கேட்டேன்.. ஒரு மிருதுவான புன்னகையோட அவங்களும்.. "ஆமாம்.. நீங்க..? ? .. அப்படீன்னு கேட்டு ஒருத்தருக்கொருத்தர் அறிமுகபடுத்திகிட்டோம். இப்படியாக ராம் - மோகன்தாஸ் - 'ஓசை' செல்லா... எல்லாரும் அறிமுகமானாங்க.. ஒருவழியா கோவிந்தும் போன் பேசி வந்தார்...ரவி- ஆசிப் மீரான் எங்க பக்கம் வந்துகிட்டிருந்தாங்க.. ..இதுக்கு நடுவிலே யாரோ கோவிந்த் கிட்டே... " ஓ.. கோவிந்த்..ஹ்ம்ம்.. ம்.. நீங்க.. நீங்க எந்த பெயரிலே பதிவெழுதறீங்க..."ன்னு கேட்க.. கோவிந்த்.. "' ஹீ.. ஹீ... யூ ஸீ.. ஐ டோண்ட் பிளாக்... என் வொயிப் தான் பிளாகர் ".. ... ன்னு என்னை காட்ட...நானும் ஹீ ஹீ..
அப்புறம் ரவி சொன்ன மாதிரி-- காண்பெரென்ஸ் ரூம் - டேபிள் பெஞ்ச்லே ஒரு வழியா செட்டிலானோம்.. 5 நிமிஷத்திலே ஐய்யப்பன் ( & family).. வந்த்தும்.. யார்-யார் எந்தெந்த பெயரிலே பதிவெழுதறாங்கன்னு. ஒரு formal introduction.. கோவிந்த். இன்னிக்கி Mr.Deepa ன்னு அறிமுகமானார்.. இப்படி ஜாலியா பதிவர் சந்திப்பு ஆரம்பமாச்சு..
நான் பயந்த மாதிரி இலக்கணம் - இலக்கியமெல்லாம் யாரும் பேசலை.. ஏதொ பழைய காலேஜ் பிரெண்ட்ஸ் மீட் பண்ணினா பேசுவோமே.. அந்த மாதிரி விஷயங்கள் தான் பேச ஆரம்பிச்சோம்.. அதிலேயும் ரவி எனக்கு அவர் பதிவிலே குடுத்திருக்கிர பட்டத்தை.. பிரேம் போட்டு மாட்டலாம்ன்னு பத்திரபடுத்தி வச்சிருக்கேன்..இதுக்கு மேலே என்ன வேணும் சொல்லுங்க..அப்புறம் செல்லா-அண்ட்-ஐய்யப்பன் நடத்திய போடோகிராபி செமினார் சூப்பர்.. சபையிலே வைத்து ஐய்யப்பன் " தீபாவிடைய Photoblog லே படமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்... DOF ( Dept of Field.. இதை குறித்து அப்புறம் செல்லா.. பாடம் நடத்துவார்..) குறித்து உங்க பதிவிலே நான் தான் கமெண்ட் போட்டேன்ன்னு.. உங்க photoblog லே படமெல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல... ".. அப்பப்பா... எனக்கு புல்லரிச்சுப்போச்சு... கோவிந்துக்கு ஒரே பெருமிதம்... கோவிந்தை அப்படியே கண்ணுலேயே நான் படம் பிடிச்சுட்டேன்னா பாருங்க... (சூ.. இனிமேயெல்லாம் கேக்ககூடாது... எனக்கு வெட்க்கமா இருக்கு...)
செல்லா ஒரு எளிமையா... நேர்த்தியான படங்களை நம்ம கிட்ட இருக்கிர காமேரா கொண்டே எப்படி படம் எடுக்கலாம்...தியரியா மட்டும் சொல்லாமல்.. இங்கே செல்லா. தியரி க்ளாஸ் எடுக்க.. ஐய்யப்பன்.. ஓடி-ஓடி... படம் பிடிச்சு.. எங்களுக்கு பிரக்டிகல் க்ளாசும் எடுத்தார்... அபேர்ச்சர் - சப்ஜெக்ட் - ஷட்டர் ஸ்பீட் - இதையெல்லாம் நான் இப்போ சொல்லபோவதில்லை... நோட்ஸை பதிவிலே போடுவார்.. அப்போ நீங்களே படிக்கலாம்... ( ஹை.. க்ளாஸை கட்டடிச்சு நோட்ஸ் மட்டும் குடுன்னா .. குடுத்திருவோமா என்னா..அஸ்குபுஸ்கு).. இந்த பிராக்டிகல் செஷனில் ஐய்யப்பன் - ராம் - கோவிந்த் - செல்லா- ரவி - ஜீ - இவங்கயெல்லாம் தான் models ... (ஏதொ இருக்கிரதை வச்சு ஒப்பேத்தியாச்சு.. ரவிக்கு அவரை வச்சு காமெடி பண்ணுராங்களோன்னு ஒரு சந்தகம் கூட இருந்துது.. கடைசீயிலே மனுஷன் கேட்டே விட்டார்)...விரைவிலே ஐய்யபன் இந்த செய்முறைவிளக்கப்படத்தை அவர் பதிவிலே போடுவார்ன்னு நம்பறேன்..
இங்கே எனக்கு அறிமுகமான வேறு சில பதிவர்கள்... "இமசை அரசி" - ஜீ - பலூண் மாமா - அனானி அர்ச்... இவர்கள் பதிவை நான் அதிகம் படிக்காத்ததால் .. வெறும் புன்சிரிப்போடு சரி.. .2.30 மணிக்கு group photo session ... அதுக்கப்புறம் ஆஷ்ரமம் எப்படி போகணும்ன்னு ஐய்யப்பன் கிட்டே வழி கேட்டு பத்மப்பிரியா & நாங்கள் லால்பாக் மெயின் கேட் பக்கம் நடையை கட்டினோம்.. ராம் சொல்லியிருந்த கேப் வேறு இடத்தில் இருந்ததால்.. நங்கள் டைரெக்ட்டாக ஆஞ்சனேயர் கோயில் பக்கம்ம் வந்து வயிட் பண்ணுவதாக பேசிக்கொண்டோம்.. பத்மப்ப்ரியா எங்களை அவர் ஸ்கூட்டியில் பிந்தொடந்து வந்தார்.... பாதி தூரம் போனதும்... எனக்கு ஒரே வயிற்றுவலி .. அதான் வீம்புக்கு இட்டிலியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்ன்னு ஆர்டர் போட்டேனே... ஆஞ்சனேயர் கோயில் கிட்டே போனா.. "நோ பார்க்கிங்".. காரிலிருந்துகொண்டே.. பத்மப்பிரியாவுக்கு... இது தான் கோயில்.. நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க "...ன்னு செய்கையிலே சொல்லி... அப்புறம் போண் போட்டு என் நிலமையை சொன்னேன்.. பாவம்.. அவர் கொஞ்சம் கூட தவறா நினைக்காம... " நான் வெயிட் பண்ணறேண்.. நீங்க கெளம்புங்க".. ன்னு சொன்னார்.. எனக்கு ஒரே வருத்தம்.. இவ்வளாவெல்லாம் ஜாலியா பேசி பழகி.. கடைசியிலே நல்ல முறையிலே ஒரு பை கூட சொல்ல முடியலையேன்னு....நாங்க இப்படி பாதி வழியிலே கிளம்பி வந்ததை தப்பா நினைக்காம... என் நிலமம தெரிஞ்சதும்.. " பரவாயில்லை.. இவ்வளவு தூரம் வந்தீங்களே... ரொம்ப நன்றி.. " ன்னு ரொம்ப சின்சியரா எங்களை வழியனுப்பி வைத்தார்... மற்ற பத்வர்களம் நான் இப்படி சொல்லாம-கொள்ளாம் கிளம்பி வந்ததுக்கு என்னன மன்னிக்கணும்... எல்லார்கிட்டேயும் சரியா விடை சொல்ல முடியவில்லைன்னு எனக்குள்ளே ஒரு வருத்தம் இருக்கு. இதுக்கு ஈடாக.. அடுத்த பதிவர் சந்திப்பிலே பர்ஸ்ட்-டூ-லாஸ்ட் இந்து தான் வரணும்ன்னு எனக்கு நானே பிராமிஸ் பண்ணியிருக்கேன்
மோகன்தாஸ் அவர் பதிவிலே ஆஷ்ரமத்தில் எடுத்த படங்களை போட்டிருக்கார்...பலூண் மாவின் பலூண் கிரீடம் போட்டு கோண்டிருக்கும் அந்த குழந்தைகள் முகத்திலே எவ்வளவு சந்தோஷம் பாருங்க..அடுத்த பதிவர் சந்திப்பு ஆகஸ்ட்-5 க்கு இருக்கு.. அப்போ நான் சென்னையில் இருப்பேனா என்பது சந்தேகம் தான்..முடிந்தால் அங்கே பார்க்கலாம்... என்ன நீங்க வருவீங்க தானே..

16 comments:
ம்...வரலாற்று சிறப்புமிக்க பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட "டெக் தீபா" அவர்களே ! நல்லா எழுதி இருக்கீங்க உங்க அனுபவத்தை.
\\மிஸ்டர் தீபா என்று அறிமுகப்படுத்தப்பட்டார் //
:)
பெருமித முகபாவனையின் உங்க கண்ணால் எடுத்த போட்டோவும் அட்டகாசம்.
சூப்பர் கமெண்டரி! சொல்லியிருந்தா ஒரு பூரிசெட் வாங்கி வந்திருப்பமே!
அப்புறம் உங்களையே ஒரு மாடெல் ஆ வச்சும் ஒரு ப்டம்எடுத்திருக்கார். நீங்களும் போட்டோஜெனிக்கா தான் இருக்கீங்க அதுல! செல்லா சொன்னாருன்னு கோவிந்த் கிட்ட ஓசர் பந்தாவிடாதீங்க! அப்புறம் அவர் என்னையும் சேத்து திட்டுவார்! :-)
யக்கோவ்,
நல்லா எழுதிருக்கீங்க.. அந்த வெட்கப்படும் முகத்தைப் பக்கத்துல இருந்து பார்க்கவாச்சும் பெங்களூரு வந்திருக்கலாம் போலிருக்கு ;)
டெக்னிக்கல் சூறாவளி தீபா அவர்களே...
இந்த பட்டம் பற்றி கோவிந்துகிட்ட சொன்னீங்களா ?
நல்ல பதிவு...சாப்பிடலைன்னாலும் சமோசாவை வாங்கிக்கலை போலிருக்கு ? பதிவர்களிடம் சொல்லியிருந்தா மாங்கா வாங்கி கொடுத்திருப்போமே !!
நல்லா எழுதியிருக்கீங்க தீபா. உங்க கூட இருந்துட்டு வந்தா மாதிரி இருக்கு. நல்லா சாப்பிடுங்க ;-)
முத்துலெட்சுமி..
..பதிவர் சந்திப்பு கிளம்புவதுக்கு முதல் வாழ்த்து சொன்னதும் நீங்க தான்.. இப்பொ முதலாவதா எனக்கு பின்னூடம் போட்டதும் நீங்க தான்..
செல்லா..
வாங்க ...பார்த்தேனே.. ரெண்டு படத்தையும் பார்த்தேனே.. ஜீவ்ஸ் அனுப்பி தந்தார்.. சும்மா சொல்லகூடாது.. கோவிந்தை ஒரு விவேகானந்தர் ரேண்ஜுக்கு expression குடுத்த மாதிரி இருக்கு..
பூர்ணா..
வாங்கக்கா.. சொகமா இருக்கீயளா? ? அப்போ அடுத்த பங்களூர் சந்திப்புக்கு நீங்க வறேன்னு சொல்லரீங்க.. வாங்க..வாங்க..
ரவி..
வாங்க..எனக்கு இப்படி ஒரு டாகரேட் ரேஞ்சுக்கு பட்டம் குடுத்திருக்கீங்க.. சொல்லாம இருப்பேனா..குட்-குட்ன்ன்னு ரெண்டு தட்டு தட்டி...கீப் இட் அப் ன்னு சொன்னார்.. அதான் சொன்னேனில்லே.. பிரேம் பண்ணி வச்சிருகேன்னு..:)
ஜெஸிலா..
வாங்க..
///உங்க கூட இருந்துட்டு வந்தா மாதிரி இருக்கு//// அப்போ தானே அடுத்த பதிவர் சந்திப்புக்கு வருவீங்க..
////நல்லா சாப்பிடுங்க ;-) /// அமாம்..அதுக்கப்புறம் தான் இதெல்லாம்..
எனக்கு தெரிந்த பல பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் போல இருக்கிறதே!! :)
நல்லா இருந்துச்சு பதிவு!
வாழ்த்துக்கள்!! :)
CVR..
வாங்க.. நன்றி.. சந்திப்பும் ரொம்பவே நல்லா இருந்தது
தீபா அக்கா...
அட்டகாசமாக எழுதியிருக்கீங்க ;))
உங்களில் உள்மனசு கமெண்டரியும் கலக்கல் ;))
வாங்க கோபிநாத்
நன்றி..நன்றி ( இது உள் மனசிலிருந்து)
நீங்கத்தான் பாதியில் எஸ்கேப் ஆகிவிட்டீர்கள்.
ம்ம்ம் பதிவு நன்றாக இருக்கிறது.
வாங்க மோகன்தாஸ்
பாரட்டுக்கு நன்றி
Post a Comment