அழையா விருந்தாளியாய் வந்தார் அனுமார்(ஸ்)
நட்சத்திரம் குடுக்கலாம்
பங்களூர் இந்தியாவின் ஐடி நகரம் ன்னு சொன்னாலும்.. இது ஒரு பூங்கா நகரமாகத் தான் மக்களிடையே பிரபலமா இருக்கு. எங்க வீட்டுக்கு பக்கத்திலேயும் ஒரு அழகான பூங்கா இருக்கு.. ஆனா இங்கே எல்லாரும் எப்பவேணும்னாலும் வரலாம்ன்னு சொல்ல முடியாது. காலையில் 4.30 am - 9.00 am மற்றும் சாயங்காலம் 4.30 pm - 8.30 pm வரை தான் எண்ட்ரி உண்டு.
காலேயிலே உடல்-பயிர்ச்சிக்கு வரும் பெரியவர்கள்- வாலிபர்கள் தான் ஜாஸ்தி.அதே மாதிரி சாயங்காலம் அதிகப்படியா குட்டிப்பசங்களும் சும்மா ரிலாக்ஸ் பண்ணவர ஜோடிகளையும் பார்க்கலாம். மத்தியம் பூங்காவின் காம்பௌண்டை சுத்தி இருக்கும் புங்கை மர நிழலில் அப்பப்போ சில குட்டி -குட்டி பஞ்சாயத்து நடக்கும்.. ( 70+ தாத்தாஸ் நாட்டு நடப்பு பேசும் நேரம் இது.. தெரு சாக்கடை அடைப்பிலிருந்து புஷ் -அவுட்ஸோர்ஸிங்க் - பங்குச்சந்தை.. எல்லாத்தையும் புரட்டி எடுத்துடுவாங்க)... பல Sales Representatives ஐ இங்கே குட்டி தூக்கம் போடுறதையும் பார்க்கலாம்... பூங்கான்னா காதல்-ஜோடிகள் இல்லாம இருக்குமா... இவங்களுக்கும் இங்கே இடம் உண்டு... பக்கத்து போலீஸ் ஸ்டேஷனிலிருந்து யாரும் மோப்பம் பிடிச்சு வராத வரை
இப்படி இந்த பூங்காவை சுத்தியிருக்கும் எங்களை போல residents உம்.. நாங்க உண்டு - பூங்காவில் நடக்கும் ஸீன்ஸ் உண்டுன்னு.. சுமுகமா காலம் தள்ளிகிட்டிருந்தோம்.நேத்தும் எப்பவும் போல தான் பொழுது விடிஞ்சுது... எல்லாரும் அவங்க-அவங்க வேலையிலெ மும்மரமா இருந்தோம்... மத்தியானம் கொஞ்சம் அப்படி கண் அசருவதில்லையா...அப்படி ஒரு 12.30 மணி இருக்கும்... ஒரே கீ கீ சத்தமும் கூடவே டபார்-டபார்ன்னு மொட்டைமாடியிலேயும் ஷேட் மேலே போட்டிருக்கும் ஷீட் மேலேயும் யாரெல்லாமோ ஓடுறா மாதிரி ஒரு சத்தம் கேட்டுது
என்னா- ஏதுன்னு வெளியே வந்து பார்க்க கதவை திறந்தா... ( ரோடிலெ மக்கள்ஸ் கைய்யும் - கம்புமா).. "மேடம் வெளியே வரதீங்க.. சீக்கிரம் கதவை மூடுங்க.. எப்படியோ 8-10 குரங்குகள் நம்ம ஏரியாவிலே வந்திருக்கு... வீட்டுக்குள்ளே வந்திடப்போகுது"... ன்னு திசைக்கொருத்தரா அலறறாங்க...
நானும் ஒரு கம்பை கையிலெடுத்துகிட்டு ( ஒரு தைரியத்துக்கு தான்) கொல்லபுறமா போனேன்... (ஹப்பாடா... புடவை உட்பட எல்லா துணியும் பத்திரமா இருக்கும்).... கம்பை என்னவர் கையிலெ குடுத்து..காவலுக்கு நிக்க சொல்லி... அவசர-அவசரமா எல்லத்தையும் குரங்குக்கு முன்னாடி நான் சூப்பர்பாஸ்டா எடுத்துட்டேன்.
Batch- 1 மற்றும் Batch-2 ஐ க்ளிக்கி பார்த்து ரசிங்க...உங்க கருத்தையும் சொல்லுங்க







15 comments:
கடைசிக்கு முதல் படம் ஏதோ உங்களுக்கு மட்டும் பிரத்யோகம்மாக கொடுத்த மாதிரி இருக்கு.
ஆமாம்! கேமிரா கையில் இருக்கும் போது கம்பை என்ன செய்தீர்கள்?
தீபா.
படங்களும் அனுமார் வர்ணனையும் பிரமாதம்.
தைரியமா அழகா போட்டோ எடுத்து இருக்கீங்க.
ஒரு வேளை குரங்குகள் திருமணம் நடந்து இருக்குமோ:))))
குரங்குக்குட்டிகள் ரொம்ப அழகா இருக்கு. நல்லா எடுத்துருக்கீங்க அதுங்கள பயப்படுத்தாம நல்லா எடுத்துருக்கீங்க
வாங்க குமார்..
நீங்க சொல்லரது ரொம்ப கரெக்ட்.. 2 படத்துக்கும் grill க்கு வெளியே கைய்யை விட்டு எடுத்தேன்.. (நடுவிலே கம்பி வரக்கூடாதில்லையா)..நல்லவேளை ஆல் குரங்க்ஸ் பிசி.. இல்லைன்னா.. நான் கை வெளியே விடவும்.. கேமேராவை புடுங்கவும் எவ்வளவு நேரமாயிருக்கும்
லின்க் லே இருக்கும் மத்த படத்தையும் பார்த்தீங்களா ? ? ?
வாங்க வல்லிசிம்ஹன்
பாராட்டுக்கு நன்றி..
///ஒரு வேளை குரங்குகள் திருமணம் நடந்து இருக்குமோ:///
ம்ம்.. இருக்கலாம்.. ஆனா அது என்னமோ ஒரு பேமேலி-பிக்னிக் மாதிரி தான் இருந்துது
சின்ன அம்மிணி..
வாங்க.. அம்மாம்.. குட்டீஸ் ரொம்ப சீக்கிரம் பயந்துக்கும்.. சும்மா சூ ன்னு சொன்னாலெ அம்மா பின்னாலே ஒளிஞ்சுக்கும்..
லிண்க்லே பாருங்க குட்டீஸ்க்குன்னே நிறைய படம் இருக்கு.. பல போஸ்லே
அதான் wild life photography எடுக்கிரவங்க சொல்லுவாங்க to gain confidence ... முடிஞ்ச வரை எந்தவித திடீர் அசைவுகள் குடுக்காம இருக்கணும்..(MSc Thesis prepare் பண்ணும்போது ஏதோ ஒரு refrence புத்தகத்திலே படிச்சது)
Is that the moneys on your Photoblog?
Yes Jeevan.. they are the same group..I have narrated the incident here.. thats all.. and the pics dispayed are small..to occupy the text
/ஜூ லே பார்க்கிர மாதிரி என்னை கம்பிக்கு வெளியே இருந்து பார்த்து..... "" இந்த பிராணி நம்மை ஒண்ணும் பண்ணாது "" ன்னு/
ha.. ha.. அதுக்கு என்னவொரு நம்பிக்கை! வீன் போகலே.
இது போல நம்மையெல்லாம் பாத்து வேறு என்னென்ன நினைக்குமோ?
நல்ல எபிசோட் :)
வாங்க குமார்
///இது போல நம்மையெல்லாம் பாத்து வேறு என்னென்ன நினைக்குமோ///
இது தெரிஞ்சா animal-right activists ங்க்ர பேர்லே சவுண்ட் விடுரவங்களை ஒரு கை பார்த்துடலாமில்லே..
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
என்ன தீபாம்மா
வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்பிடித்தான் கம்பு எடுத்து விரட்டுவீங்களா? வாயில்லா
ஜீவன் மனத்திற்குள் திட்டியிருக்கும்.
வாய் உள்ளதுகளுக்கும் கம்பு தூக்கிப்
பாருங்க. கடிச்சுகுத்றிப்போடுங்க.
ராஜி
வாங்க ராஜி..
திபாவளி ஷாப்பிங் எல்லாம் ஆச்சா ? ?
///வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்பிடித்தான் கம்பு எடுத்து விரட்டுவீங்களா?///
நான் எங்க விரட்டுறதுக்கு கம்பெடுத்தேன்.. ஒரு தைடியத்துக்குன்னு தானே சொல்லியிருக்கேன் நானும் ஒரு கம்பை கையிலெடுத்துகிட்டு ( ஒரு தைரியத்துக்கு தான்)
////வாய் உள்ளதுகளுக்கும் கம்பு தூக்கிப்
பாருங்க. கடிச்சுகுத்றிப்போடுங்க////
ரொமப் சரி.. ரத்தம் சிந்தாமலேயே "கடிச்சு குதறிப்போட்டும்"
நன்றி தீபாம்மா,
முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்.உங்களின் batch-2
படங்களைப் பார்த்த என் உறவுக்கார
குழந்தைகள் மிக ஆனந்தப்பட்டார்கள்.
பூக்களையும்,விலங்குகளையும்,
குழந்தைகளையும் ரசிக்கத்தெரியாதவர்கள் மனிதர்களேயல்ல.
விலங்குகளைக்கூட ரசித்துபடமாக்கி
மற்றவர்களும் பார்க்கவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணத்திற்கு
வாழ்த்து.குழ்ந்தைகள் படிக்க ரசிக்க
மேலும் நல்லது பண்ணுங்களேன்.
ராஜி
ராஜி..
பாரட்டுக்கு ரொம்ப நன்றி.. உங்க உறவுக்கார குழந்தைகளுக்கு ஸ்பெஷல் தீபாவளி வாழ்துக்கள்... to write something light தான் என் நோக்கம்.. ஆனா என்ன பண்ண சொல்லுங்க பல நேரத்திலே டெக்னிகல்-பதிவாயிடுது.. ஆனாலும் அப்பப்போ முயர்ச்சி பண்ணிகிட்டு தான் இருக்கேன்.. hopefully i will suceed..
பூக்களை ரசிக்க பிடிக்கும்ன்னா இங்கேயும் பார்க்கலாம்.. பங்களூர்- மலர்-கண்காட்சியில் எடுத்தது
Exhibit - 1 ... Exhibit-2
Post a Comment