Monday, January 21, 2008

நானா .. நீயா.. நானோவா ?

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்

தன்-டாடா ஒரு லக்ஷம் ரூபாய் மதிப்புள்ள நானோவை அறிமுகம் செஞ்சு எல்லாருடைய பார்வையும் நம்ம பக்கம் திருப்பினது உண்மையாகவே ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் தான். "ஒரு லக்ஷ்ம் ரூபாய்க்கு தரமான காரா... ஏன்ய்யா.. லூஸாய்யா நீ "... ன்னு (diplomatic) ஆ கேட்டவங்களை ... "என்னையா லூஸான்னு கேட்டீங்க... இது எப்படி சாத்தியமாச்சுன்னு யோசிச்சு யோசிச்சு நீங்கதான் லூஸா அலையப்போறீங்க "...னு ஒரே வரியிலே "A Promise is a Promise" ன்னு நச்சுன்னு சொல்லி 4 வருஷத்துக்கப்புறம் நிம்மதியா தூங்க போயிட்டார்.தூக்கம் கெட்ட அத்தனை பேரும் ".. ம்ம்.. நாங்க இன்னும் நானோ வை ஓட்டிப்பாக்கலை.. அப்புறமா தான் எதையுமே சொல்ல முடியும் ... இப்போதைக்கு நோ கமண்ட்ஸ் "ன்னு நாசூக்கா சொல்லி நழுவிகிட்டே இருக்காங்க

சரி, இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்.. நமக்கெதுக்கு.. நாம ஏதாவது சொன்னாத்தான் எடுபடப்போகுதா ?.. அதனால நம்ம விஷயத்துக்கு வருவோம்.. நாமெல்லாம் மிடில்-க்ளாஸ் ....second hand cycle ஓட்டுறவன் சொந்தமா cycle வாங்கணும்ன்னு நினைப்பான்.. cycle இருக்கிறவன் moped வாங்க ஆசைப்படுவான் , கொஞ்சம் வசதி (மாதக்கடைசீயிலே துண்டு விழவில்லை) வந்ததும்.. "கார் வாங்கணும்" ன்னு ஆசைப்படுவான்.. (ஆசை தானே.. காசா பணமா)... ஆனா என்ன கார் வாங்க ஐந்தாண்டு திட்டம் போட்டு.. அஞ்சு வருஷத்துக்கப்புறம் அதே காருக்கு அதே விலை இருக்கும்ன்னு எதிர்பார்க்க முடியுமா ?.. மனசிலே கார்ன்னு நினைச்சு.. மோபெட்டை / ஸ்கூட்டரை வச்சு சமாளிக்க வேண்டியது தான்.

பாவம் , இவர் என்ன படாடோபத்துக்காகவா கார் வாங்கணும்ன்னு நினைக்கறார்... எப்படியும் ஆபீஸ்லே மாங்கு மாங்குன்னு வேலை செய்யறோம்.. அதுவும் climate சரியில்லைன்னா இவர் பாடு திண்டாட்டம் தான்.. வெய்யில் காலத்திலே வாடி வதங்கி சோர்ந்து போரதும்.. மழையிலே.. ரெயின்கோட்டுன்னு ஒண்ணை போட்டுகிட்டு முழுசா ஈரமாய் வந்து சேருவதும்... நினைச்சாலே சங்கடமா இருக்கு. இவருக்கு தேவை பகட்டு / பந்தா அல்ல.. an all weather vehicle...

எல்லாரும் சொல்லறாங்க.. "ஒரு லக்ஷம்"ங்கிரது எல்லா விதிமுறைகளும் முடிஞ்சு நம்ம அப்பா(வி)சாமி கார் சாவியை வாங்கும்போது குடுக்கப்போற துகையா இருக்காது.. கண்டிப்பா அதிகமா தான் இருக்கும்ன்னு ... இருக்கலாம்.. ஒத்துக்கறேன்.. ஆனா இப்போ அப்பா(வி)சாமியின் கார் வாங்கும் கனவு வெறும் கனவா மட்டுமே இருக்காது.. (என் பைய்யன் கண்டிப்பா கார் வாங்குவான்...ன்னு ஏக்கத்தோட இல்லாம).. அட.. அப்போ இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா நானேகூட கார் வாங்கலாமே .. னு யோசிக்க வச்சது ரதன்-டாடாவின் நானோ.!!!

எப்போ நம்ம அப்பா(வி)சாமி மனசிலே நானோன்னு நினைச்சதும் ஒரு விதமான தெம்பும் உற்சாகமும் வருதோ.. அப்போ எனக்கு நானோ வெறும் ஒரு நாலு சக்கிர வாகனமா தெரியலை... இது ஒரு motivation.... Willing to run an extra mile" ன்னு ஆங்கிலத்திலே சொல்லுவாங்க..எல்லாரும் அவங்களுடைய இலக்கை நோக்கி போக 100% முயற்சி எடுப்பாங்க.. ஆனால் ஜெயிக்கிறதென்னமோ.. 110% முயற்சி பண்ணினவன் தான்.. அந்த xtra 10% கிட்டதட்ட சூன்யத்திலேயிருந்து எடுத்த மாதிரி இருக்கும்.. ( இந்த அனுபவம் எல்லாருடைய வாழ்க்கையிலே ஏதோ ஒரு கட்டத்திலே நடந்திருக்கும்..re-live that moment)

இந்த கணக்குக்கு போனா ரூவாய்க்கு நாலுன்னு எல்லாரும் நானோவை கூவி கூவி விக்க ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் ரோட்டிலே மனுஷங்களை விட கார் தான் நிறைய இருக்கும்....... ஏற்கணவே மாசுபட்டு இருக்கும் சுவாசவாயு இன்னனும் மாசுபட்டு போகும்....ன்னும் விஷயம் தெரிஞ்சவங்க சொல்லறாங்க... எனக்கு இவங்களை மாதிரி பெரிய பெரிய பேச்செல்லாம் தெரியாது.. கண்ணுல பார்த்ததை.. மனசுல பட்டதை சொல்லறேன்.. கோவிச்சுக்காம படிங்க... மிடில்க்ளாஸ் மக்கள்ஸ் பஸ்லேயும், அவசரத்துக்கு ஏத்தா போல ஆட்டோலேயும் போவோமுங்க... 10 லே 8 ஆட்டோ சீமெண்ணையிலே ஓடுது.. 2 ஆட்டோ நாம கூப்பிட இடத்துக்கு வரமாட்டங்க.. ( அவங்க போகிர இடத்துக்கு பக்கமா இருந்தா நம்மளையும் ஏத்திக்குவாங்களாம்... நம்ம மேலே ஏத்தாம் இருந்தா சரி ).. பஸ்ஸை சர்வீஸுக்கு விட்டு எத்தனை வருஷமாச்சு ன்னு அதோட புகை கலரை வச்சே சொல்லலாம்

ஓடுரவரைக்கும் ஓடட்டும்.. அப்புறம் ( பஸ் & ஆட்டொ) இதை வேலைக்காவாதுன்னு சொல்லி புதுசா வாங்க வேண்டியது தான்னு நினைக்கிர்றாங்க.. (யாரு இப்படி நினைக்கிறாங்கன்னு நான் சொல்லமாட்டேன்.. நாளையிலுந்து நான் ஆட்டோலேயும் பஸ்ஸிலேயும் தான் போகணும்). ஆனா Private vehicles ஐ பாருங்க.. பெரும்பாலும் எல்லாத்துக்கும் ( 90%) pollution control certificate இருக்கும்.. (PCC ஐ ஒரு standard ஆக எடுத்துக்கோண்டால்)..எனக்கென்னமோ சுவாசவாயு மாசுபட அதிக காரணமா இருக்கிரது சர்வீஸ் பண்ணாத்த ஆட்டோவும் பஸ்ஸும் தான்னு தோணுது...

நம்மூரிலே மகளிர் vote bank எல்லாருக்கும் வேணும்.. இது அவங்களுக்காக :-) பஸ்ஸிலே கல்லூரி /வேலைக்கு போகும் பெண்கள் , சக பிரயாணிகளின் சில்மிஷங்கள் இருந்தாலும் குடும்ப சூழல் காரணமா பல்லைக்கடிச்சு ( safetly pin ஆல குத்தி ... உண்மையிலேயே சேப்டி தான்) காலத்தை தள்ளுறாங்க..கொஞ்சம் வசதி உள்ளவங்க 2 wheeler லே போறாங்க.. ஆனாலும் பயம் தான்..இவங்களுக்கு நானோ ஒரு பாதுக்காப்பு கவசம் மாதிரி ( உடனே ... கார்லே போகும் பெண்களுக்கு ஆபத்தே இல்லையா ன்னு sensus எடுத்து கணக்கு காட்ட புறப்படாதீங்க)..

எந்த ஒரு விஷத்தை எடுத்தாலுமே.. அதுக்கு நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நல்லதை சொல்லுறவங்க மத்தியிலே ஒருத்தர் கெட்டதை மட்டுமே சொன்னா அவர் பேச்சு எடுபடாது.. அதே மாதிரி கெட்டதை மட்டுமே பேசுறவங்க மத்திலே ஒருத்தர் மட்டும் என்னதான் நல்லதை சொன்னாலும் அது யாருக்கும் பிரயோஜனப்படாது.. அதுக்கு தான் நம்ம முன்னோர்கள்.. எல்லாருடைய அபிப்பராயத்தையும் கேள்.. ஆனால் உன்னுடைய எண்ணத்தை மட்டுமே செயல்படுத்துன்னு சொல்லியிருக்காங்க..

என்னுடைய அபிப்பராயத்திலே Pros outweights the cons . நானோவால் வரும் நிறை குறைகளை தராசில் போட்டால் நிறை தான் நிறைய இருக்கிறா மாதிரி இருக்கு, உங்க அபிப்பிராயம் என்னவோ ? ?

20 comments:

said...

நானோ ஒரு லட்சம் தான் ஆனா ஒரு ஆட்டோ மூணு லட்சமாம்.. அதனால எல்லா ஆட்டோக்காரங்களும் எங்களுக்கு ஒரு நானோ வை ஆட்டோவா உபயோகிக்க அனுமதி கிடைச்சா வாடிக்கையாளர்கள் வசதியா போலாமேன்னு சொல்லி இருக்காங்க.. அங்கயும் ஒரே கவலைதான் பெண்கள் தனியா பயணிக்கும் போது மட்டும் தான் சங்கடம் மத்தபடி எங்க ஊருகுளிருக்கு ஆட்டோ இப்படிஆகினால் வாங்க வசதி இல்லாத சாதாரணக்குடும்பம் குறைந்தகாசில் நல்ல பயணம் கிடைக்கப்பெறுவார்கள்.. ஒரு மாற்றம் தானே.. மெட்ரோ வந்து பாதி பேரு குறைந்துடுவாங்க அந்த சமயம் இது வருது சமமா ஆகிடும் ரோடு

said...

//உடனே ... கார்லே போகும் பெண்களுக்கு ஆபத்தே இல்லையா ன்னு sensus எடுத்து கணக்கு காட்ட புறப்படாதீங்க//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னாது இது சந்திரமுகில வருகிற ரஜினிமாதிரி அப்படியே கரீட்டா கெஸ் பண்றீங்க?!

said...

ஆமாங்க நான் இந்த கார் வாங்கிதான் ட்ரைவிங் கத்துக்கலாம்னு இருக்கேன்.

காஸ்ட்லி கார் வாங்கி கத்துக்க போய் எங்கயும் ஸ்க்ராட்ச் ஆச்சின்னா ரொம்பா ஃபீல் ஆகும்ல!!

said...

நேனோ-வை ஒரு தெம்பு உற்சாகம் தரும் motivation ஆகப் பார்க்கும் உங்கள் பார்வை எனக்குப் பிடித்திருக்கிறது. இது பன்னாட்டரங்கில் ஏற்படுத்தி இருக்கும் சலசலப்பும் ஏராளம். அதன் பிரதிபலிப்பை இங்கு (அமெரிக்க) பெரும்பத்திரிக்கைத் தலையங்கங்கள் முதல் பார்க்கலாம். சூழல் குறித்த கருத்துக்கள் இருந்தாலும், புதிய பாதையில் செல்லும் டாட்டா இதையும் சமாளிக்கப் பொறியியல் திட்டங்கள் புதுமையாகக் கொண்டு வர முயலலாம். இப்போதைக்கு இது ஒரு பெரிய சாதனையே.

said...

முத்தக்கா ...
//அதனால எல்லா ஆட்டோக்காரங்களும் எங்களுக்கு ஒரு நானோ வை ஆட்டோவா உபயோகிக்க அனுமதி கிடைச்சா வாடிக்கையாளர்கள் வசதியா போலாமேன்னு சொல்லி இருக்காங்க///
யோசனை என்னமோ நல்லா தான் இருக்கு.. ஷேர் ஆட்டோ மாதிரி ன்னுக்கூட சொல்லலாம்.. ஆனா 1 லக்ஷம் தானேன்னு maintenance இல்லாம விட்டா.. அப்புறம் மறுபடியும்.. pollutiuon congestion ன்னு தலைதூக்கும்.. சொந்த வண்டின்னா.. சரியா maintain பண்ணுவோம்.. "for" public transport ..ன்னு வரும்போது.. சந்தேகமா இருக்கு :-?

said...

@பா,ந.இ
.. ஹ்ம்ம்.. அப்போ நானோ பத்தி கருத்து எதுவும் இல்லையா.. இல்லை.. வங்கிட்டுதான் பேசணும்ன்னு இருக்கீங்களா ???

said...

@மங்களூர் சிவா
//காஸ்ட்லி கார் வாங்கி கத்துக்க போய் எங்கயும் ஸ்க்ராட்ச் ஆச்சின்னா ரொம்பா ஃபீல் ஆகும்ல!!///
நியாயமான பேச்சு.. புதுசா வாங்கும்போது எல்லாருக்கும் இருக்கும் தயக்கம் ..தான்.. புது வண்டி வாங்க வாழ்துக்கள்

said...

@செல்வராஜ்
வணக்கம்...வாங்க..
பாரட்டுக்கு நன்றி... கார் லோண் போட்டு வாங்கிரவங்க நிறைய பேர் இருந்தாலும்.. இன்னமும் ஒரு சராசரி இந்தியன் கார் வாங்கணும்ன்னா... சேமிச்சு தான் வாங்கணும்ன்னு நினைப்பார்... அவருக்கு தேவை.. 4 சக்கிரம் - 4 கதவு -1 கூரை- 4 பேர் உட்கார இடம் ...Ac / radio / power windows எல்லாம் கூட அவருக்கு வேண்டாம்.. அப்படிப்பட்டவருக்கு நானோ ஒரு "சாத்திய்மாகக்கூடும்" ங்கிர கனவு

நானோ ஏர்ப்படுத்தும் பரபரப்பு.. நானும் கூட டீவீ / இணையம் / print media லே follow up பண்ணிகிட்டு இருக்கேன்.. this is just the begining ன்னு தான் எனக்கு தோணுது..

said...

தீபா இங்கே தில்லியில் நானோவை சொந்த உபயோகத்துக்கு என்றால் தான் நீங்க சொல்லும் பொல்யூசன் கவலை எல்லாம்.. இங்கே பொது உப்யோக வண்டிகளான ஆட்டோ டாக்ஸி பஸ் என்று அனைத்துமே சிஎன் ஜி கேஸ் வண்டிகளாத்தான் இருக்கனும் என்பது கட்டாயம்..

said...

A down to earth review. Happy that Nano is a great contribution by TATAs to the Indian consumers and an achievement in the Auto industry. Howeber, I feel that Nano will make things worser for the environment. With the all the limitations we have on the infrastructure, I'm sure we wont even find room for the parking lot. May be TATAs should think of inveting a land-making machine too. Then, Nano will fit in.

http://kodaihills.blogspot.com/2006/03/highway-to-hell.html

said...

செம கலக்கலான போஸ்ட் :)
அருமையா அலசி எழுதியிருக்கீங்க.

கனவுகளை நனவாக்குவது தானே டெக்னாலஜியின் மூல மந்திரம். கோடிக் கணக்கில் முதலீடு செய்து நடத்தப்படும் முயற்சிகளின் பலன்கள் ஒரு சிலருக்கு மட்டுமே எட்டக் கூடியதாக இருந்தால் என்ன பயன்?

எல்லா லெவல் மக்களையும் பயனடையச் செய்யும் இப்படிப்பட்ட நேனோ கண்டிப்பாக ஒரு புரட்சி தான்.

Pros outweights the cons - Agree with it totally.

said...

@முத்தக்கா..
//சிஎன் ஜி கேஸ் வண்டிகளாத்தான் இருக்கனும//
ஹ்ம்ம்.. அப்படீங்கறீங்க... ஏதோ எல்லாருக்கும் நல்லது நடந்தா சரி

said...

@சிவா..
வாங்க.. பாராட்டுக்கு நன்றி..
பார்க்கிங்க்கு இடம் இல்லாமல் திண்டாடும் உங்க கவலை புரியாம இல்லை.. இது ஒரு perpetual problem.. வரும் காலங்களில் வீட்டு வீடு வாசப்படிங்கிரது போயி ( flats லெ ஏது வாசப்படி)... வீட்டுக்கு வீடு multi level parking ன்னு வந்தாலும் ஆச்சர்யப்படரதுக்கு இல்லை...
//Howeber, I feel that Nano will make things worser for the environment///
இதுவும் சரி தான்.. fast food வந்தால மக்கள்ஸ்க்கு நிறைய health problems வருதுன்னு சொல்லராங்க.. எல்லாரும் படிக்கறொம்.. மத்தவங்களுக்கும் சொலறோம்.. ஆனாலும்.. நாமும் ஏதோ ஒரு நேரத்திலெ பிச்சா கார்ணர் போய் சாப்பிட்டு தானே வறோம்... envronmental problem ம் அது மாதிரி தான் நினைக்கணும்... ரொம்ப யோசிசா.. அப்புறம்.. பூமிக்கு பாரமா நாம ஏன் இருக்கோம்ன்னு தோணிடும்..
ஸோ.. lets lern co exist with our problems.. for they are here to stay.

said...

@வாங்க குமார்
பாராட்டுக்கு நன்றி...
//கனவுகளை நனவாக்குவது தானே டெக்னாலஜியின் மூல மந்திரம்///
பல பேர் காசு பண்ணரதுன்னு சொல்லறாங்களே.. அப்போ அதெல்லாம் லொலலாய்யா... நல்ல வேளை நீங்க சொன்னீங்க.. இல்லைன்னா.. இந்த உண்மை தெரியாம மக்காவே இருந்திருப்பேன்... மத்த மக்கெல்லாம் எப்பத்தான் தெரிஞ்சுப்பாங்களோ !!

//Pros outweights the cons - Agree with it totally.//
அதே.. ஸேம் ஸேம்..

அளவுக்கு அதிகமா குத்தம் சொல்லரவங்களும்.. அள்வே இல்லாம் அளந்துகிட்டு இருக்கிரவங்களும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லைன்னு யரோ சொன்னதா.. யரோ என் கிட்டே சொன்னாங்க..

அதனால.. குறைபாடுகளே இல்லாத்த விஷயத்தை தேடினோம்னா.. எதுவுமே மிஞ்சாது.. எதையுமே குறைகளை புரிஞ்சுகிட்டு ஏதுகிட்டா தான் maximim efficiency பார்க்க முடியும்... இது மனுஷணுக்கும் பொருந்தும்.. மிஷிணுக்கும் பொருந்தும் ... என்ன நான் சொல்லரது ??

said...

//பல பேர் காசு பண்ணரதுன்னு சொல்லறாங்களே.. அப்போ அதெல்லாம் லொலலாய்யா... //

Enjoyed that expression :)))

யாரோட கனவுங்கறது தான் பிரச்சினை!

காசும் பார்க்கட்டும், கூடவே நல்லதும் நடக்கனும். நம்ம அரசியல்வாதிகளிடம் குறைந்த பட்சம் இதைத் தானே கேட்கிறோம்?

S.L.Kirloskar அவர்களின் வரலாற்றில் அவர் அப்போதைய காங்கிரஸ் தலைவர்களுடன் மோதியதாக இருக்கும்.

பிரச்சினை இதே விஷயம் தான். ஒரு industrialist லாப நோக்கில் செயல் படுவது என்பது ஒரு கேவலமான/dirty எண்ணம் என்றே அப்போதைய மத்திய அரசு சொன்னது.

லாபமற்ற தொழில் அதுவும் technology related industry செய்பவர்கள் எந்த முன்னேற்றத்தையும் செய்துவிட முடியாது என்றே அவர் நம்பினார்.

பூனாவில் வசிக்கும் மஹாராஷ்ட்ரியர்களிடம் கேட்டுப் பாருங்கள் இதன் மகத்துவத்தை!
இன்றும் அவர் மேலிருக்கும் மக்களின் நல்லெண்ணம் சற்றும் குறையாமல் இருக்கிறது.

said...

குமார்..
//லாபமற்ற தொழில் அதுவும் technology related industry செய்பவர்கள் எந்த முன்னேற்றத்தையும் செய்துவிட முடியாத/// couldnt agree more...

எந்த ஒரு விஷ்யத்தை நாம செய்யும் பொதும்.. what's in it for me ன்னு ஒரு குறல் கேக்கும்.. literally , figuratively ,and also philosophically.. ( யாராது..அங்கே.. ! அப்படி எல்லாம் இல்லைன்னு பீலா வுடுறது... யோவ்.. எங்கே !.. "நான் செஞ்ச உதவியை அவன் மறந்து பேசறான்... ன்னு நீ நினைச்சதே இல்லே ... ".. ஒண்ணையும் எதிர்ப்பார்க்கலைன்னா.. உங்ககு என்னத்துக்குய்யா கோவமும் வருத்தமும் வருது ... )

சாரி குமார்.. அது உங்களுக்கு இல்லை.. கூட்டத்திலே கேட்டா அடையாளம் தெரியாதுன்னு சவுண்ட் வுடுறவங்களுக்கு...

நீங்க சொன்ன விவரம் நானும் படிச்சிருக்கேன்.. என்ன ஒரு தொலைநோக்கு பார்வையும் சிந்தனையும் இருந்திருக்கும் அவருக்கு.. (கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு..!!!)

said...

அப்படிப் போடுங்க...

இங்கே நாமெல்லாம் நானோ பற்றி நம் அறிவிற்கு எட்டியவரை அலசுவதற்கான பதில்களை ரத்தன் டாடா இன்றைய Times of Indiaவில் சரியான நெத்தியடியாகக் கொடுத்திருக்கிறார்.

Just a sample:

Question :But India's roads are in terrible shape already.Can they take another 250,000 units of this car? Isn't a more efficient public transport system the answer? It took me one hour to go from south Delhi to Pragati Maidan today and the traffic was a nightmare…

Ratan Tata: India desperately needs a mass transport system and better infrastructure. But those are issues that we don't deal with.I would be concerned if our vehicle created absolute chaos all over India.If you faced chaos today it did not include these vehicles…so clearly there are other issues involved.But my point is should the masses be denied their individual transportation rights? This car is not a targeted at a particular segment of consumers.But having said that I hope it will change the manner in which one travels in semi urban and rural India.

ஆஹா...தலைவர் வாழ்க!

said...

குமார்...
///But those are issues that we don't deal with.I would be concerned if our vehicle created absolute chaos all over India////
//should the masses be denied their individual transportation rights///
எக்ஜாட்லி... இது எப்படடீருக்குன்னா... ' கூட்டுக்குடும்ப்மா ஒண்டிகிட்டு இருக்கோம்.. வீடும் சிறுசா இருக்கு.. அதனாலே யாரும் புள்ள பெத்டுக்காதீங்க ன்னு ச்சொல்லரா மாதிரி இருக்கு... please onot feel offended if any of my readers feel that this commment is explicit.. (it is not intended to be so)

said...

@Deepa - பச்சை மரத்துல ஆணி அடிச்சிட்டீங்க:)

said...

yeah ! Promise is a promise..Kalakittaru annaiki I saw his words amazing@

THANKS FOR VISITING MY BLOG.
TRY READING THE STORY NAAN AVAL ATHU THERE!