Thursday, June 12, 2008

Virtual Assistant (பாகம் 2) – VA என்றால் யார் ??

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்

பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2
Virtual Assistant ன்னா என்னான்னு ஒரு அறிமுகம் பாகம் 1 லே பார்த்தொம். (..அது வெறும் டிரைலர் தான்..)அடுத்த கட்டமான “என்ன மாதிரி வேலையெல்லாம் ஒரு VA கிட்டே செய்யவச்சுக்கிலாம்” ங்கிரதை பார்க்கிரதுக்கு முன்னாடி VA பற்றி , VA யும் கூட தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் சிலது இருக்கு..

முந்தைய பதிவின் கடைசீ கட்டத்திலிருந்து ஆரம்பிப்போமா…

முன்ன-பின்னே பார்க்காம, யாரு என்ன ஏது ன்னு எதுவுமே தெரியாத்த ஒருத்தர்கிட்டே எப்படி வேலை வாங்கிரது…

அப்படீன்னு சொல்லியிருந்தேனில்லையா???…

இது கொஞ்சம் இக்கட்டான (ஆனால் நியாயமன) கேள்வி தான். பதில் சொல்லரது சிரமம் தான்... இதுக்கு பதில் சொல்லரதுக்கு முன்னனடி.. ஒரு “Virtual Asssistant” ன் கண்ணொட்டத்திலிருந்து இந்த கேள்வியை பார்க்கணும். ஏன்னா இங்கிருந்து பதிவு ரயில் தண்டவாளம் மாதிரி parlell ஆ போகும்.

VA என்றால் யாரை குறிப்பிடும்:-

VA ன்னா மிஷிண் இல்லை, வெற்று கிரகத்திலிருந்து வந்த ஜந்து இல்லை..… உங்களையும் என்னையும் போல ரத்தமும் சதையும் உள்ள மனுஷங்க தான்.

VA ன் குணாதிசயங்கள்:-

அவருடைய துறையிலே திறமை மிக்கவராக இருக்க வேண்டும்.
( ஒரு VA தன்னை எப்படி வலையுலகில் அறிமுகப்படுத்திக்கணும்னு வரும் பதிவுகளில் சொல்லறேன்)

உதா 1: - Photoshop லே வித்தை காட்டரவ்ங்க “Graphic designer” ஆக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் .. இவருக்கு என்னமாதிரியான வேலை குடுக்கலாம் …. Logos , Banners , icons ன்னு ஆரம்பிச்சு… Brochures , Flyers, website ன்னு பெரிய லெவெல் வரை குடுக்கலாம் .Flash லெ கில்லாடின்னா ஸ்டிரைட்டா webdesign , Conceptualised demo

உதா 2: - எந்த ஒரு விஷயத்தையும் வலைபோட்டு தேடி கண்டுபிடிக்கும் திறமை உங்களுக்கு இருந்ததுன்னா.. நீங்கள் “Web research Consultant / assistant” அப்படீன்னு ஆறிமுகப்படுத்திக்கலாம்… இதில் உங்களுக்கு ஓரளவுக்கு Excel sheet - Data validation பண்ண தெரிஞ்சா உபயோகமா இருக்கும்…( இதுக்கேல்லாம் கூடவா காசு குடுப்பாங்கன்னு நினைக்கதீங்க… பல கம்பனிகளுக்கு அவங்க competitors பத்தின Reserch material தேவையா இருக்கு… ஆபீஸ் பசங்களை பண்ண சொன்னா எங்கே தாவிடுவாங்களோன்னு முன்ன பின்னே தெரியாத்தவங்களை தான் பண்ண் சொல்லுவாங்க)

உதா 3: - உங்களுக்கு தடையில்லா இண்டர்நெட் வசதியும்.. தடங்கல் இல்லாம குறைந்த பக்ஷம் 4 – 5 hrs இணையதளத்தில் இயங்க முடியும்ன்னா நீங்க.. “Back office support” என சொல்லப்படும் Email Response handling , Customer support ( Voice or text உங்க விருப்பம்), Data consolidation போன்ற வேலைகளை தேர்ந்தெடுக்கலாம்.

உதா 4: - அட.. உங்களுக்கு பதிவு தான் எழுத தெரியும்ன்னே வசுக்குவோமே… நீங்க Blog writer ன்னு அறிமுகம் என்ன தண்டொராவே கொட்டலாம் (ஆனா பெரும்பாலான blog writing projects எல்லாம் ஆங்கிலத்திலே இருக்கும்)..

உதா 5: - :- அட இதுலே எந்த திறமையும் என் கிட்டே இல்லைன்னு நீங்க நினைச்சா கூட “copy paste” பண்ணுவீங்க இல்லையா.. உங்களுக்காக “Data Entry” வேலை காத்துகிட்டு இருக்கு.

Things are easily said than done.. ன்னு சொல்லறா மாதிரி.. மேலே சொல்லியிருக்கும் உதா எல்லாமே மேலோட்டமான பார்வைக்குதான். எந்த வேலையுமே சுளுவா அமையாது.. சுலபமா முடியாது.. அதாதுக்கு தகுந்த மாதிரியான சவால்களை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்.

மறுபடியும் சொல்லறேன்… ஒரு VA தன்னை எப்படி அறிமுகப்படுத்திக்கணும்ங்கிரது ரொம்ப ரொம்ப ரொம்பவே முக்கியம்… ஏன்னா இந்த (சுய) அறிமுகம் தான் உங்கள் Virtual Assistant Career ( career னு சொல்லும்போது லைட்டா எடுத்துக்கதீங்க… ஏன்னு இந்த தொடர் படிக்க படிக்க உங்களுக்கே தெரியவரும்)…ஐ நிர்ணையிக்கும்.... VA க்கான வேலை இருக்கு, சரியான ஆள் தேவைன்னு தேடுரவங்க உங்க அறிமுகத்தை வச்சே திறமைசாலியா… இல்லை தருமிசாலியா ( அதாங்க ...“திருவிளையாடல் தருமியா “ ன்னு )கண்டுபிடிச்சுடுவாங்க.

(தொடரும்…)
பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2

11 comments:

said...

/
(தொடரும்…)
/

ரைட்டு சீக்கிரம் தொடருங்க!!
:)

said...

ம்ம்...வித்தியாசமாக இருக்கு...வெயிட்டிங் ;)

said...

Your Blog is listed here!

said...

சிவா . .. கோபினாத்..
நன்றி... ஆனாலும் ரொம்ப பொறுமை தான்

said...

Thanks chella..
Rather unique effort

said...

முதல் பாகம் படிக்கும் போது கொஞ்சம் சோர்வா இருந்தது... நமக்கு வழக்கமா கிடைக்கிற லெக்சர்ல இப்போ தீபாக்கா பதிவும் சேன்ர்ஹுடிச்சினு நெனைச்சேன்.. :).. (ஸாரி)..

ஆனா 2வது பாகம் படிக்கும் போது எக்கச்சக்கமாய் ஆர்வம் தொற்றிக் கொண்டது... நல்லாவே வழிகாட்டப் போரிங்கனு தெரியுது.. இதோ இப்போவே 3 வது, 4வது பாகமும் படிச்சிடறேன்...

நல்ல முயற்சிக்கா.. :)

said...

நன்றி சஞ்சய்
// நமக்கு வழக்கமா கிடைக்கிற லெக்சர்ல இப்போ தீபாக்கா பதிவும் சேன்ர்ஹுடிச்சினு நெனைச்சேன்.. .. (ஸாரி)../
இதுக்கு எதுக்கு சாரி… உண்மை தான்.. … கொஞ்சம் ஆங்கில பதிவுகளையும் படிச்சு பாருங்க.. lecture தவிர வேறே ஒண்ணும் இருக்காது.. ( லெக்ச்சர் பதிவெல்லாம் தமிழிலே நிறைய பேர் எழுத்றாங்கன்னு நான் சும்மா இருந்துட்டேன்.. அம்புட்டுத்தேன் !)

said...

//இதுக்கு எதுக்கு சாரி… உண்மை தான்.. … கொஞ்சம் ஆங்கில பதிவுகளையும் படிச்சு பாருங்க.. lecture தவிர வேறே ஒண்ணும் இருக்காது.. //

க்ரேட் எஸ்கேப் :P

//லெக்ச்சர் பதிவெல்லாம் தமிழிலே நிறைய பேர் எழுத்றாங்கன்னு நான் சும்மா இருந்துட்டேன்.. அம்புட்டுத்தேன் !)//

:-))

said...

ஐயையோ! என்ன இபப்டியெல்லாம் சொல்லிக்கொடுக்கிறீங்க!!
அப்புறம் உங்க பதிவை படிக்கமுடியாம போயிடுமே??

said...

ஏங்க... ஏதாவது தப்பா சொல்லிடேனா ?... ஏன் இவ்வளவு பீதி

said...

நம்மளயும் கொஞ்சம் ஞாபகம் வெச்சிக்கோங்க மறந்திடாதீங்க‌
balaji