Wednesday, July 09, 2008

Virtual Assistant (பாகம் 6 ) – பைசா , காசு, டப்பு

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்

Virtual Assistant (பாகம் 4.2) – VA Profile

பாகம்1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4.1 பாகம் 4.2 பாகம் 5 பாகம் 6

வேலை முடிஞ்சதும் வாத்தியாரை கழட்டிவிடரதுன்னு சொல்லரது சரியா தான் இருக்கு. எங்கேயெல்லாம் Virtual Assistant ஆக பதிவு செய்யலாம்ன்னு சொன்னப்புறம் ஒருத்தரையும் இந்த பக்கம் காணும்.. Incomming links ஐ விட Outgoing links தான் ஜாஸ்த்தியா இருக்கு. ஏதொ உபயோகமா இருந்தா சரிதான். ..

இந்த பதிவு Financial Transactions ஐ எப்படி வச்சுக்கலாம்ங்கிரதை பத்தி தான். ( என்ன .. தலைக்கு மேலே பல்பு எரியுதா.. அந்த பல்பு வெளிச்சத்திலேயே மேலே படிங்க).


இப்போ, உங்களுக்கு VA க்காக தனி மெயில் , பல freelance தளங்களில் உங்களுடைய Registration , உங்க திறமைய்யை காட்டும் டெமோ எல்லாம் இருக்கு. இது கூடவே தனி நபர் VA பக்கம் ( blog or use free web domains) இருதா இன்னும் உத்தமம். இனிமேல் தைரியமா வேலைக்கு அப்பளை பண்ணலாம்.

உங்க திறமைய்யை சார்ந்த வேலைக்கு சங்கோஜப்படாம அப்பளை பண்ணுங்க. நீங்க எந்த freelance தளத்தை சார்த்து விண்ணப்பம் போடரீங்களோ.. அது படி நடந்துக்குங்க… சுமார் 50 வேலைக்கு அப்பளை பண்ணினா 2 – 3 இண்டர்வ்யூ தேறும். இங்கேயும் சில எழுதப்படாத்த விதிமுறைகள் இருக்கு.


  1. உங்க VA's email ID மட்டுமே குடுங்க.
  2. பணிவா பேசுங்க ( அதுக்காக கொழஞ்சு கொழஞ்சு பேசாதீங்க)
  3. நீங்க முன்வைக்கிர கருத்து client க்கு புரியுதான்னு கேட்டு வேண்டியது செய்ய்ங்க
  4. உங்களுக்கு புரியாத்தது.. கண்டிப்பா கேளுங்க, கேக்கணும்.
  5. குறஞ்ச பக்ஷம் 1 நாள்க்குள்ளே பதில் கடிதம் போடுங்க.

சரி, இண்டர்வ்யூ முடிஞ்சுது, அடுத்தது How do I pay you ? ன்னு Client கேப்பாரு ( இது கேட்டாலே உங்களுக்கு தான் அந்த வேலை).

இங்கே கவனிக்க வேண்டியது என்னன்னு சொன்னா …

சம்பதப்பட்ட client ஏதாவது Freelance தளத்தில் இருந்து உங்களை அணுகியிருக்கலாம். அப்படி இருக்க.. அந்த தளத்திர்க்கான Payment methords ஐ கடைபிடிக்கிரது தான் புத்திசாலித்தனம்… அனேகமா Escrow ஆ தான் இருக்கும்.

Escrow ன்னா :-

அதாவது வேலை ஆரம்பிக்கும் போது Escrow account ல் client காசை deposit பண்ணுவார். ஒரு முறை Escrow account ல் டெபாசிட் பண்ணிட்டா, அப்புறம் client அந்த பணத்தை தனியா வாபஸ் எடுக்க முடியாது ( website admin must intervene)

அதே மாதிரி, காசு இருக்கு, நான் லவுட்டிகிட்டு ஓடிட்டறேன்.. என்ன தெரியவா போகுதுன்னு நினைச்சா… அதுவும் முடியாது. Client டெபாஸிட் தான் பண்ணியிருக்கார்… இன்னும் காசை "release" பண்ணலை. ஆக காசு இருக்கு – ஆனால் இப்போ எடுக்க முடியாது.

ஒரு வேலைன்னு வரும்போது, அதுக்கு ரெண்டு முக்கிய விளைவுகளுக்கு வாய்ப்பிருக்கு.

  1. வேலை நல்ல படியா முடிஞ்சுது – உங்களுக்கும் client க்கும் திருப்தியா இருக்கு … இந்த நிலையிலே Cleint will release the funds .. அதன் பிறகு you can withdraw the funds.
  2. ஏதோ காரணம் – ஒரு பரஸ்பர தீர்மானம்… The project has to be cancelled…. இந்த நிலையில்…நீங்கள் escrow account ல் இருந்து … You can cancel the payment – client gets his money back .. ஆனால் இது பரஸ்பர தீர்மானத்தில் இருதால் மட்டுமே சுமுகமா இருக்கும்
  3. In case of dispute contact the site administrator (இது வராம பார்த்துக்குங்க)

Withdrawing the Funds:-

சரி, இப்போ வேலையும் நல்ல படியா முடிஞ்சுது. Cleint has released the funds. ஆனா நமக்கு காசு கைய்யிலே வரணுமே…. அதுக்கு தானே இவ்வளவு கஷ்ட்டபடறோம்…

எல்லா freelancing websites ம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Withdrawal options வச்சிருப்பாங்க… சில முக்கிய Withdrawal options are Bank Tansfer , Paypal , eGold, Payoneer etc, eCheque, Cheque-via-Mail

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சில இருக்கு:-

  1. Bank Transfer :- See if your country is included in this
  2. Paypal - நீங்கள் ஒரு paypal acct துவங்கணும் – free account க்கு வருஷத்துக்கு 5 transactions க்கு தான் அனுமதி உண்டு – இங்கே இருந்து உங்கள் வங்கிக்கு Bank transfer செய்யலாம் .. ( read transacton fee and other details)… காசு கைய்யிலே வர 2 – 4 வாரம் ஆகும்
  3. eCheque , Cheque via mail, eGold – இது எல்லாமே Virtual Assistants மத்தியிலே அவ்வளாவு பிரபலமா இல்லை… முட்ஞ்ச வரைக்கு இது எல்லாத்தையும் நாங்க avoid பண்ணிடுவோம்.
  4. Payoneer Debit Card :- இது என்னுடைய தனிப்பட்ட பரிந்துரை. காரணம்… register பண்ணி 15 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு physical plastic Card தபால் / குரியரில் வந்து சேரும். Payoneer தளத்தில் போய் ஒரு முறை Activate the Card செய்ய வேண்டும்.

    அதன் பிறகு, you can withdraw from sites such as Scriptlance and oDesk. இது மட்டும் இல்லை… தனிப்பட்ட முறையிலே ( not through freelancing sites) உங்களை அணுகினால்… Payoneer card மூலமாக you can accept payment from 3rd party members.

    Once the funds are loaded onto the Payoneer card , You can withdraw from any Mastercard ATM -- காசை லோட் பண்ணிட்டீங்கன்னா… ஒரே வாரத்துக்குள்ளே ATM லேயிருந்து சுட சுட நோட்டு கைய்யிலே இருக்கும்… postal delaz , bank leave … ன்னு எதுவும் இல்லை

    ஆனால்… Freelance தளத்திலிருந்து Load பண்ணினால் 2 $ Service charge… 3rd party payments ன்னா 3.5% Service Charge. அதே மாதிரி – 2 $ per withdrawal .

    But, Looking at the certainity of receiving funds within the shortest possible time, I feel this is just and fair

ஆக Virtual Assistant & Virtual Assistance குறித்து மேலோட்டமா சொல்லியிருக்கேன். இதிலே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. இந்த தொடர் பதிவை இங்கே முற்றும்ன்னு போட்டாலும்… உங்களுக்கு ஏதாவது கேக்கணும்ன்னு இருந்தா தாராளமா கேளுங்க.. எனக்கு இருக்கிர அனுபவத்தை வச்சு சொல்லறேன்.. எனக்கு தெரியலைனனா… தெரிஞ்சவங்களை கைய் காட்டி விடறேன். இதுவரை பொறுமையா எல்லா பதிவையு படிச்சவங்களுக்கும் , பின்னூட்டம் போட்டவங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. உங்கள் Virtual Assistance Career க்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நன்றி ,
வணக்கம்
அன்புடன் தீபா

( இனிமேல் திடர்வது உங்கள் கருத்தில்.... )
பாகம்1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4.1 பாகம் 4.2 பாகம் 5 பாகம் 6

3 comments:

said...

இவ்வளவு விஷயம் சொன்னதற்கு நாங்கள் தான் நன்றி சொல்லனும்.

said...

தீபா அக்கா.. உங்களின் மூலமாக ஒரு புதிய விஷயத்தை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் ;)

மிக எளிமையாக சொல்லியிருக்கிங்க ....வாழ்த்துக்கள் ;)


இப்போதைக்கு ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றாலும்...நட்பு வட்டாரத்திற்கு உதவிட உங்கள் பதிவுகள் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.

உங்களுக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் ;)

said...

/
வேலை முடிஞ்சதும் வாத்தியாரை கழட்டிவிடரதுன்னு சொல்லரது சரியா தான் இருக்கு. எங்கேயெல்லாம் Virtual Assistant ஆக பதிவு செய்யலாம்ன்னு சொன்னப்புறம் ஒருத்தரையும் இந்த பக்கம் காணும்..
/

ஹா ஹா அப்படி இல்ல நிறைய பேர் கூகிள் ரீடர், feedblitz மூலமா ஜிமெயில்லயே படிக்கிறதால இருக்கும்.

அருமையான தொடர். நன்றி, வாழ்த்துக்கள்.