Friday, March 06, 2009

நித்தியகண்டம் பூர்ண ஆயுசு

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்

பொதுவாகவே கிராமத்திலே யாரவது ரொம்ப வயசானவங்க இழுத்துகிட்டு இருந்தாங்கன்னா.. சொந்த பந்தத்துக்கேலாம் சேதி சொல்லியனுப்பி வரசொல்லிடுவாங்க. விஷயம் கேட்டதும் எல்லாரும் ஓடிவந்து என்ன-ஏதுன்னு விசாரிச்சு இனிமே என்ன பண்ணலாம்ங்கிரதை பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாப்பாருங்க.. எல்லாரும் வந்து.. இன்னும் என்ன – " எப்போ " ங்கிர நேரத்துக்கு காத்துகிட்டு இருக்கும்போது நம்ம ஆளு ( அதாங்க இப்பவோ அப்பவோன்னு இழுதுத்துகிட்டு இருந்தாரே ), சும்மா ஹீரோவாட்டம் ஜம்முன்னு எழுதிருச்சு கதை பேச ஆரம்பிச்சுடுவாரு. ஒண்ணும் தப்பில்லே... ஏதோ இப்பத்த கண்டத்திலேயிருந்து தப்பிச்சுட்டார்ன்னு எல்லாரும் சந்தோஷமா ஊரு திரும்பி வேலைய்யை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ( ஏதோ ஒரு படத்திலே வரா மாதிரி ... பரத் படம்ன்னு நினைக்கறேன் ... இந்த சம்பவம் உங்களுக்கு ஏமாற்றத்தை குடுத்தா... அதுக்கு உங்க தலையெழுத்து)

என்னடா கதை சொல்லறேனேன்னு பார்க்கறீங்களா?.. நேத்து ஒரு மீட்டிங்காக காத்திருக்கும்போது வலைமேஞ்சப்போ நாட்டுநடப்பெல்லாம் விஸ்தாரமா படிச்சேன். ( இத்தனை நாள் படிக்கலையா... உங்க வீட்டிலே செய்தித்தாளே இல்லையான்னெல்லாம் கேக்ககூடாது.. அப்புறம் நான் சொல்லவந்த விஷயத்தை மறந்திடுவேன்). அப்படி படிச்சுகிட்டு இந்த போது மனசுக்கு பட்டதின் வெளிப்பாடு தான் மேலே சொன்ன குட்டிகதை ( அப்புறம் அந்த தாத்தாவுக்கு என்ன ஆச்சு , அவர் என்ன சிரஞ்சீவியான்னெல்லாம் கேக்ககூடாது... இது வெறும் ஒரு உவமை தான்). சரி, இதுக்கும் நம்ம நேஷணல் நியூசுக்கும் என்ன சம்பதம்ன்னு தானே கேக்கறீங்க... ஏதோ என மனசுக்குப்பட்டதை சொல்லறேன்.

டிஸ்கி :- சரியான விவரங்களுக்கு கூகிளாண்டவரை அணுகவும்.. இது அரசியல் பதிவு அல்ல.


மிக சமீபத்தில் நடந்த லாஹூர் தாக்குதல். "டேய்! எங்க ஊருக்கு விளையாட வாங்கடா.. ஜாலியா இருக்கும்" ன்னு நம்பி போன இலங்கை அணிக்கு நேரிட வந்த தீவிரவாத-தாக்குதல், அதனால் அவங்களுக்கு வந்த மன-உளைச்சல், இனிமேல் பாக்கிஸ்த்தானில் கிரிக்கெட் மட்டும் இல்லை வேறே எந்த விளையாட்டும் "ஜாலியா" விளாயடமுட்யுமாங்கிர சந்தேகம், இன்னும் சொல்லப்போனால், அங்க மற்ற நாட்டுகளை அழைத்து எதையுமே ( பிசினஸ் மீட்டிங், இண்டெர்ணாஷணல் காண்பிரண்ஸ்) பயம் இல்லாமல் நிறைவேற்ற முடியாதுங்கிர பொதுவான அபிப்பராயம். ஆக மொத்ததி பாக்கிஸ்த்தானியர்களை தவிர வேறே யாராலையும் "நிம்மதியா" பால்-பாகெட் கூட வாங்க முடியாதுங்கிரது என் அபிப்பராயம். இதிலே கவனிக்கவேண்டியது லாஹூருக்கும் அம்ரித்சருக்கும் 45 KM தான் இடைவேளி. கொஞ்சம் மெனெக்கெட்டா நடந்தே போயிடலாம் இங்குட்டுக்கும் அங்குட்டுக்கும்.

அப்புறம், ரொமப நாளாவே நமக்கும், மேலே சொன்ன பாக்கிஸ்த்தானுக்கும் நடக்கும் காஷ்மீர் பிரச்சனை. என்னுடைய காஷமீரி சினேகிதியின் குடும்பம் 1990 ல் அங்கே இருந்து மூட்டை-முடிச்சு கட்டிகிட்டு பம்பாய் வந்துட்டாங்க... நிஜமாவே ஆளுக்கொரு மூட்டை.. அதிலே என்னவெல்லாம் இருந்துதோ அதுதான் அவர்களின் மொத்த சொத்து. மத்தெல்லாம் போனால் போகட்டும் உசுரோட தப்பிச்சோம்டா சாமின்னு வந்தவங்க தான். இப்போ நல்லா முன்னேறி, படிப்பு, உத்தியோகம்ன்னு செட்டிலாயிட்டாங்க.. ஏன் சொத்துகூட வாங்கிடாங்க. காஷ்மீரில் இல்லை, பம்பாயில். பாவம் அங்கள் – ஆண்டிக்கு மட்டும் கண்ணோரம் ரெண்டு துளி வந்து மறைஞ்சு போகும் ( காஷ்மீரை பற்றி பேசினால்), அவங்க பேரப்பிள்ளைகளேலாம் கஷ்மீரை India Map லே பார்த்ததோட சரி (ஆனால் , பக்கத்தில் இருக்கும் படத்தை க்ளிக்கு பாருங்க " Indian Claim" ன்னு போட்டிருக்கும்..No Man's Land மாதிரி ). வருத்தம் – அங்கலாய்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்காலத்தை நோக்கித்தான் இனிமேல் பயணம்ங்கிரதை எனக்கு சொல்லிக்குடுத்த குடும்பம் இது.


கொஞ்சம் அப்படியே கீழே வந்து கிழக்காலே பார்த்தோம்ன்னா பளிச்சுன்னு இருக்கும் பங்களாதேஷ். அங்கே, தாக்காவில் போன வாரம் நடந்த சில இராணுவப் படைவீறர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அரசாங்கத்துக்கு காவலாக கருதப்படும் ராணுவ வீரர்களில் சிலர், உயர் ராணுவ அதிகாரிகளையும், அவர்களை சார்ந்தவர்களை தயவு தாட்ஷண்யம் பார்க்காம சுட்டுகொண்ணு ரணகளம் பண்ணிட்டாங்க, sepoy Mutiny மாதிரி. இந்திய ராணுவத்தின் உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக குடுப்போம்ன்னு நம்ம அரசாங்கமும் சொல்லியுருக்காம். இப்போ நிலமை ஏதோ பறவாயில்லை. ( ஆனாலும் பாவம்ங்க.. சடலங்களை பார்த்தா குலை நடுங்குது)

அப்புறம், இலங்கையில் நடக்கும் LLTE பிரச்சனை... இதை பத்தி நான் எதுவுமே சொல்லலைங்கோ... நம்மால பாட்டுவாங்க முடியாது.

உள்ளுரில் என்ன சச்சரவுக்கு பஞ்சமா.. அஸ்ஸாம் பக்கம் தொடரும் நக்ஸல் மற்றும் உல்பா தாக்குதல், வங்காளத்தில் மமதா பண்ணும் ரகளை, பங்களூரில் பிரமோத் முதாலிக் பண்ணும் லந்து.. அதுக்கு எதிர்மறையா குறல் குடுக்கும் சொபா-டேவின் சீதா-சேனா ( not to mention the Pink chaddi campaign), தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக நடத்தப்படும் போராட்டம் , சத்தியம் காரணமாக சாஞ்சுகிட்டு இருந்த பங்குச்சந்தை மொத்தமாக சரிந்தது ன்னு பல பிரச்சனை.

இதனாலே நான் சொல்ல வரது என்னானா... வடக்கே பாக்கிஸ்தான் – காஷ்மீர் , இந்த லிஸ்ட்டில் சீனாவும் சேர்த்துக்கலாம், அப்புதம் மேற்க்கே பங்களாதேஷ், தெற்க்கே இலங்கை ன்னு நம்ம நாட்டுக்கு 3 பக்கத்திலே இருந்தும் பல நெருக்கடி,மற்ற பக்கங்களில் கடல் இருக்கோ தப்பிச்சோம். இப்படி பல பரிமாணங்களில் பிரச்சனைகளை சந்திக்கும் இந்தயாவுக்கு நித்திய கண்டம் ன்னு சொன்னா எப்படிங்க தப்பாகும்.


ஆனாலும் பாருங்க.. ஏதோ, எதையோ பண்ணி, நாமும் முண்டியடிச்சு முன்னுக்கு போயிட்டு இருக்கோம். மற்ற நாடுகளுள் எல்லாம் " இத்தனை பிரச்சனைகளையும் வச்சுகிட்டு எப்படி தான் இந்த 3rd world country நம்ம கிட்டே போட்டி போடும் நிலமைக்கு வளர்ந்திருக்கு" ன்னு யோசிக்கும்படி வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

--- இப்போ சொல்லுங்க.. இந்தியாவுக்கு நித்தியகண்டம் பூரண் ஆயுசு ன்னு நான் சொல்லறது சரி தானே !

13 comments:

said...

நாளை என்பது எங்கும் நிச்சயமில்லை. இப்போது இந்த மணித்துளி எப்படி இருக்கிறோம் என்பதே சாஸ்வதம்.

நல்லா எழுதியிருக்கீங்க.

said...

வாங்க சிவா..
//இப்போது இந்த மணித்துளி எப்படி இருக்கிறோம் என்பதே சாஸ்வதம்.//

100 ல் ஒரு வார்த்தை.
ஒவ்வொரு துளியைய்யும் சாஸ்வதமாக்கிக்கொள்ள எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கு இல்லையா...

said...

வணக்கம் யோகன் பாரிஸ்.

ஆமாம், நான் கவனிக்க தவறிவிட்டேன்... ஒரு ஆதங்கத்தில் மனம் போன பொக்கில் எழுதிய பதிவு. நீங்கள் சொன்ன மாதிரி திருத்தி விட்டேன்.

மன்னிக்கணும்.. அந்த பதிவுக்கான எந்த பின்னூட்டத்தையும் நான் பிரசுரிக்கவில்லை.. It was a part of my grieving process.

உங்கள் எல்லாருடைய பிராத்தனையும் அந்த ரெண்டு ஆன்மாக்களுக்கு போய் சேரட்டும்.

நன்றி.

said...

Present mam. Live in this moment has become part of our lives. U never know :)

Welcome back to blogosphere.

said...

//வடக்கே பாக்கிஸ்தான் – காஷ்மீர் , இந்த லிஸ்ட்டில் சீனாவும் சேர்த்துக்கலாம், அப்புதம் மேற்க்கே பங்களாதேஷ், தெற்க்கே இலங்கை ன்னு நம்ம நாட்டுக்கு 3 பக்கத்திலே இருந்தும் பல நெருக்கடி//

எல்லாப் பக்கமும் ரௌண்டு கட்டி அடிக்கறாங்கன்னு சொல்லுங்க.

அனா, தற்காலத்துல முக்கால்வாசி நாடுகள் இது மாதிரி பிரச்சினைகளுக்குள்ளதான் இருக்காங்க.

//ஏதோ, எதையோ பண்ணி, நாமும் முண்டியடிச்சு முன்னுக்கு போயிட்டு இருக்கோம்//

இதுவும் கடந்து போகும்"ங்கற நம்ம நம்பிக்கைதான்.

said...

நல்ல பதிவு.

நன்றி

said...

வாங்க முத்தக்கா..
... உண்மைதான்.. பிரச்ச்னைங்கிரதுக்காக நாம் இயங்கிரதை நிறுத்த முடியுமா ?

said...

well said priya

.. Thanks.. hopefully i will stay a bit longer this time.

said...

வாங்க கணினி தேசம்
//அனா, தற்காலத்துல முக்கால்வாசி நாடுகள் இது மாதிரி பிரச்சினைகளுக்குள்ளதான் இருக்காங்க. ///

எவ்வளவு உண்மை.. ஆனா பாருங்க.. " என் துயரம் தான் ஜாஸ்தி" ங்கிர மனோபாவமும் எல்லாருக்கும் இருக்கே..

ஏதோ.. நீங்க சொல்லரா மாதிரி இதுவும் கடந்து போகும்ங்கிர நம்பிக்கை தான் பலம்.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

said...

ஆங்காங்கே சொற்பிழைகள் சில இருந்தாலும் முன்னை விட வெகுவாக முன்னேறியுள்ளீர்கள்,எழுத்து நடையும் சுவையாக இருக்கிறது!!
மேலும் நிறைய தமிழில் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்!!

பிரச்சினை இல்லாத நாடே கிடையாது!!!
அப்படி பிரச்சினை இல்லாமல் இருந்தால் அந்த நாட்டிற்கும் மதிப்பு கிடையாது!!! பிரச்சினைகளெல்லாம் முறியடித்து எந்த அளவு முன்னிலைக்கு வருகிறதோ அந்த அளவுக்கு அந்த நாட்டிற்கு மதிப்பு கூடும்.அப்படி வருவதற்கு திறமை வாய்ந்த பல இளைஞர்களும் மக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள்!!
தேவை என்னவோ தலைவர்களுக்குத்தான்....

We shall overcome... :)

said...

வாங்க சிவிஆர்
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் , ஊக்கத்திர்க்கும் நன்றி..

வாரம் ஒரு பதிவாவது போடணும்ன்னு தான் ஆசை ... ஹ்ம்.. பார்ப்போம்.

//We shall overcome... :)//

100% உண்மை.. we will overcome தான் இப்பொழுதைய இளைஞ்சர்களின் தாரக மந்திரம்.

said...

வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் பதிவை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள், தீபா. நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

said...

எப்பொழுது யாருக்கு ஓலை வரும் என்பது யாருக்கும் தெரியாது!! நல்லா எழுதியிருக்கிறீர்கள்!!!